தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளில் ஆங்கிலப் படிப்புக்கு புது மவுசு

கல்லூரிகளில் ஆங்கிலப் படிப்புக்கு புது மவுசு

கல்லூரிகளில் ஆங்கிலப் படிப்புக்கு புது மவுசு


UPDATED : அக் 23, 2009 12:00 AM

ADDED : அக் 23, 2009 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2009 12:00 AM ADDED : அக் 23, 2009 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

‘அரசு, தனியார் நிறுவனங்களில் ஆங்கில மொழியில் திறன் பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதே இதற்கு காரணம்’ என்கிறார், கோவை அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் கருணாமூர்த்தி.


கல்லூரிகளில் பி.ஏ., வரலாறு, பி.ஏ., தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த படிப்புகளை படித்து முடித்த பலர் இன்னும் வேலை கிடைக்காமல் திண்டாடுவதே காரணம். இதற்கு நேர் மாறாக பி.காம்., பி.ஏ., ஆங்கிலம் படிப்புகளுக்கு கல்லூரிகளில் மவுசு அதிகரித்துள்ளது.


குறிப்பாக பி.ஏ., ஆங்கிலம் என்றாலே ஒதுங்கிய கலைக் கல்லூரி மாணவர்கள் கூட இன்று அப்படிப்பில் ஆர்வமுடன் சேர்கின்றனர். பிற வேலை வாய்ப்புள்ள படிப்புகளை படித்திருந்தாலும் ஆங்கில தகவல் தொடர்பில் சிறந்து விளங்குபவருக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதே இந்த புதிய மாற்றத்தின் பின்னணி.


இது பற்றி கோவை அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் கருணாமூர்த்தி கூறியதாவது:
எங்கள் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்புக்கு முதல் ஷிப்டில் 40 மாணவர்கள், இரண்டாம் ஷிப்டில் 40 மாணவர்கள் என மொத்தம் 80 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை குறைவாகவே இருந்தது. இன்று நிலைமை தலைகீழ் ஆகி விட்டது. பி.ஏ., ஆங்கில இலக்கியப் படிப்பில் சேர ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அனைவருக்கும் இடம் கொடுக்க முடியாத நிலை உருவாகி விட்டது. இதே நிலைமைதான் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்புக்கும் உள்ளது.


மொத்தம் 18 இடங்களே உள்ள அப்படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது. இதனால் பி.ஏ., எம்.ஏ., ஆங்கில இலக்கிய படிப்புகளுக்கு பல்கலையில் கூடுதல் இடங்களுக்கான அனுமதி கேட்டு வாங்கியுள்ளோம். இந்தியாவில் அதிகளவில் பெருகி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் இந்த மாற்றத்துக்கு காரணம். பட்டப்படிப்பில் எந்த பாடத்தை படித்து முடித்தாலும் வேலையில் சேர ஆங்கில மொழி தெரிந்திருப்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது. அரசு பணி முதல் தனியார் நிறுவனங்கள் வரை ஆங்கிலத்தில் பேசுபவருக்கே இன்று வேலையில் முக்கியத்துவம் தருகின்றனர். ஆங்கில பாடத்துக்கு பெருகி வரும் மவுசு, இனி வரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


கோவை அரசு கலைக் கல்லூரி மட்டுமல்ல, தனியார்  கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஆங்கிலப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us