தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடாது’

‘இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடாது’

‘இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடாது’


UPDATED : அக் 23, 2009 12:00 AM

ADDED : அக் 23, 2009 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2009 12:00 AM ADDED : அக் 23, 2009 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:


அடுத்த கல்வியாண்டில் இருந்து முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்த தேவையான பாடத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளனவே?


சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை ஏற்கனவே எடுத்த முடிவின்படி ஏற்பாடுகள் அனைத்தும் படிப்படியாக திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. இணைய தளத்தில் இப்போது வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் அனைவரது கருத்துக்களையும் கேட்டறியவே. நடைமுறைக்கேற்ற, ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுமானால், அவற்றின் அடிப்படையில் இப்பாடத் திட்டங்களை திருத்தியமைக்க முயற்சிக்கப்படும்.


பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் வருமான அடிப்படையில் முன்னேறியவர்கள் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு அம்மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு தோன்றியுள்ளதே?


சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசு வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பது தான் இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கம். இந்த அடிப்படை லட்சியத்துக்கு மாறான எந்த முயற்சியை எதிர்த்து வருகிறோம்.

தற்போது, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவு அடிப்படையில் பிற்பட்டோருள் முன்னேறிய பிரிவினர் (கிரீமி லேயர்) எனப் பகுத்து இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் பொருளாதார அடிப்படையை புகுத்தக்கூடாது என்பது தான் நமது கொள்கை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us