தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி: அக்.27ல் வரைவு பாடத்திட்ட கருத்தரங்கு

சமச்சீர் கல்வி: அக்.27ல் வரைவு பாடத்திட்ட கருத்தரங்கு

சமச்சீர் கல்வி: அக்.27ல் வரைவு பாடத்திட்ட கருத்தரங்கு


UPDATED : அக் 23, 2009 12:00 AM

ADDED : அக் 23, 2009 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2009 12:00 AM ADDED : அக் 23, 2009 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது பற்றி கல்வியாளர்கள் விவாதிக்கும் முக்கிய கருத்தரங்கம் கோவையில் அக்., 27ல் நடைபெறவுள்ளது.


தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. கல்வி நிபுணர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் அடங்கிய நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட இப்புதிய கல்வி முறையின் வரைவு பாடத் திட்டம், தீதீதீ.ணீச்டூடூடிடுச்டூதிடி.ஞிணிட் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வரைவு பாடத்திட்டம் பற்றி தமிழகம் முழுவதும் விவாதங்கள் நடத்தி அதன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


இது பற்றி அதன் இயக்குனர் இளங்கோ கூறியதாவது:
வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வியின் வரைவு பாடத்திட்டத்தை, அனைத்து ஆசிரியர்களும் கல்வியாளர்களும் காண வேண்டும். புதிய பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை அறிய, அக்., 27ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இது பற்றிய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட கல்வி அலுவலர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்துக்கு 10 பேர் வீதம் ஐந்து பாடங்களுக்கு 50 சிறந்த ஆசிரியர்களை கருத்தரங்கில் கட்டாயம் பங்கேற்கச் செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் துவக்க நிலை, உயர்நிலை, மெட்ரிக், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோ கூறினார்.


இந்த உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அக்., 27ல் சமச்சீர் கல்வி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில், குட்ஸ் ஷெட் ரோடு பிரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது. உடுமலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் இளங்கோ, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் ராஜகோபால், கோவை கல்வி மாவட்ட அலுவலர் சுபாஷிணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.


கருத்தரங்கில் சேகரிக்கப்படும் கல்வியாளர்களின் கருத்துக்களை, அக்., 28க்குள் சென்னையில் உள்ள ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


வட்டார வள மையங்களில் கருத்து சேகரிப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் வட்டார வள மைய ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி.காம் இணையதளத்தில் உள்ள சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டத்தை பார்வையிட்டு, அதில் உள்ள நிறை, குறைகளை அக்., 24ல் நடைபெறவுள்ள வட்டார வளமைய கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.


ஒவ்வொரு வட்டார வள மையத்திலும் ஆங்கிலம் தவிர்த்து மீதமுள்ள பாடங்களை கையாளும் தலா 40 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். இக்கூட்டங்களில் சேகரிக்கப்படும் கருத்துக்களை அக்., 31க்குள் தெரிவிக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இயக்குனர் வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us