தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கம்

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கம்

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேரவை துவக்கம்


UPDATED : அக் 23, 2009 12:00 AM

ADDED : அக் 23, 2009 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2009 12:00 AM ADDED : அக் 23, 2009 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில், தமிழ்ப் பேரவை துவக்க விழா நேற்று நடந்தது.


தமிழ்த் துறை பேராசிரியர் ஜார்ஜ் வரவேற்றார். கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் மோசஸ் மைக்கேல் பாரடே தலைமை தாங்கினார்.சென்னை, பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் வேணுகோபால் பேசுகையில், ‘தமிழ் படிக்க மாணவர்களுக்கு ஆர்வம் இல்லை என்ற நிலை உள்ளது. தமிழ் படித்தவர்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதை மாணவர்கள் மெய்ப்பித்து காட்ட வேண்டும்,’ என்றார்.


குத்துவிளக்கேற்றி பேரவையை துவக்கி வைத்த, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக் குனர் குணசேகரன், மக்கள் பிரச்னைகளை வலியுறுத்தும் கிராமப்புற பாடல்களை பாடினார். விழாவில், தமிழ்த்துறை மாணவர் தீர்த்தமலையின் நாட்டுப்புற பாடலும், பி.காம்., மாணவி ஜெகதீஸ்வரியின் பரதநாட்டியமும் நடந்தது. கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாசன், மாணவத் தலைவர் செந்தில்வேலன் மற்றும் மாணவ, மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us