தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘ஐ.டி., துறையில் 6 கோடி புதிய வேலை வாய்ப்பு’

‘ஐ.டி., துறையில் 6 கோடி புதிய வேலை வாய்ப்பு’

‘ஐ.டி., துறையில் 6 கோடி புதிய வேலை வாய்ப்பு’


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அடுத்த 4 ஆண்டுகளில் ஐ.டி., துறையில் சுமார் 6 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உலகெங்கும் உருவாக்கப்படும் என்று இந்த அமைப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது உலகில் 52 நாடுகளில் உள்ள ஐ.டி., துறையில் மேற் கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நாடுகளின் ஐ.டி., துறை செலவினங்கள் ஒட்டு மொத்த உலக ஐ.டி., செலவினங்களில் 98 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வை மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பாக ஐ.டி.சி., நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வு கூறும் சில நம்பிக்கை தரும் தகவல்கள் இங்கே...


* பொருளாதார மந்த நிலையிலிருந்து மாறுவதற்கு ஐ.டி., நிறுவனங்களே முக்கியப் பங்காற்றவுள்ளன. ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியுடன் ஐ.டி., துறையானது மேம்படவுள்ளது என்றும் 75 ஆயிரம் புதிய ஐ.டி., வர்த்தக நிறுவனங்கள் உருவாகிடும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.


* சர்வதேச சந்தையில் உள்கட்டமைப்பு, கல்வி, திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் நாடுகள் அடுத்த சில மாதங்களில் சிறந்த இடத்தைப் பெறவுள்ளன. பொருளாதார சீரமைப்பு தோன்றிடும் காலத்தில் புதுமையான தொழில்நுட்பத்தின் காரணமாக உற்பத்தித் திறன் மேம்பாடு, திறன் தேவைப்படும் பணிகள், புதிய வர்த்தகங்கள் ஆகியவற்றால் பொருளாதார மீட்சியும் போதுமான பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.


* பொருளாதார மீட்சி ஏற்படும் போது, பிற துறை பணி வாய்ப்புகளை விட ஐ.டி., துறையில் 3 மடங்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஆய்வு கணிக்கிறது. பொருளாதார மந்த நிலை ஒரு புறம் இருந்த நிலையிலும் சாப்ட்வேர், புதிய கருவிகள், இன்டர்நெட் தொடர்பான சேவைகள் போன்றவை தொடர்ந்து வளர்ச்சியை பாதித்துள்ளன.


* ஏற்கனவே ஐ.டி., துறைக்காக கணிசமாக செலவிடும் நாடுகள் துறையில் 3 சதவீதத்துக்கு அதிகமான வளர்ச்சியைப் பெறவுள்ளன. இந்த நாடுகளின் ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியைப் போல 3 மடங்கு அதிக வளர்ச்சியை இவை இத்துறையில் பெறவுள்ளதாக இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. சராசரி வளர்ச்சி விகிதம் 3 சதவீதத்தை ஒட்டியிருக்கும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 4.8 சதவீத வளர்ச்சியடையும் என்று கணிக்கப்படுகிறது.


தற்போது அலுவலகங்களிலும் வீடுகளிலும் சாப்ட்வேரை வாங்கி, அதை நிறுவி பயன்படுத்தும் முறையிலிருந்து சாப்ட்வேரை ஆன்லைனில் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தும் முறையானது அதிகமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் என்னும் இந்த முறையால் பயன்பாட்டுச் செலவு குறைவதோடு சந்தையில் புதிய பொருட்களும் விலை குறைந்த சேவைகளும் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் சீரடைவதில் ஐ.டி., துறை முக்கியப் பங்காற்றும் என்றும் இதனால் அடுத்த 4 ஆண்டுகளில் மறுமலர்ச்சியும் புதிய எழுச்சியும் தோன்றும் என்றும் ஐ.டி.சி., ஆய்வு முடிவுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us