தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தனி தேர்வர்கள் நிலை என்ன?

10ம் வகுப்பு தனி தேர்வர்கள் நிலை என்ன?

10ம் வகுப்பு தனி தேர்வர்கள் நிலை என்ன?


UPDATED : ஆக 12, 2020 12:00 AM

ADDED : ஆக 12, 2020 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2020 12:00 AM ADDED : ஆக 12, 2020 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, தேர்ச்சி குறித்து அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேநேரத்தில், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த, தனி தேர்வர்களுக்கான நிலை என்ன என்பதை, பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை. அவர்களுக்கு தேர்வையும் நடத்தவில்லை; தேர்ச்சியையும் உறுதி செய்யவில்லை.
பல தேர்வர்கள், பணி வாய்ப்பு பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், வேறு அரசு பணிகளுக்கும், இந்த தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் எண்ணங்களை புரிந்து, தனி தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us