தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100வது முறை சென்னை வந்த மிதவை பல்கலை கப்பல்

100வது முறை சென்னை வந்த மிதவை பல்கலை கப்பல்

100வது முறை சென்னை வந்த மிதவை பல்கலை கப்பல்


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: நவீன வசதிகள் கொண்ட ‘எம்.வி., எக்ஸ்புளோரர்’ மிதவைப் பல்கலைக் கப்பல், இரண்டு  இந்திய மாணவர்கள் உட்பட 510 மாணவர்களுடன், நேற்று காலை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது.


ஐந்து நாட்கள் தங்கி, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மகாபலிபுரம், காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கலாசாரம், வரலாறு குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். பகாமாஸ் நாட்டைச் சேர்ந்த, ‘எம்.வி.,எக்ஸ்புளோரர் கப்பல்’ நேற்று காலை  சென்னை துறைமுகம் வந்தடைந்தது. இக்கப்பலில் உள்ள ‘வெர்ஜினியா’ மிதவைப் பல்கலைக்கழகத்தில், தென்ஆப்ரிக்கா,  அமெரிக்கா, இங்கிலாந்து  உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த, 510 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில் கிரிதர், பூர்ணிமா என இரண்டு சென்னை மாணவர் களும் இடம்பெற்றுள்ளனர்.


தங்களது படிப்பின் ஒரு பகுதியாக, இம்மாணவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாட்டின் கலாசாரம், கல்வி, சரித்திரம்  உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இதன்படி, கனடா, ஸ்பெயின், காமா, தென் ஆப்ரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் சென்றனர்.
மொரிஷியசில் இருந்து கடந்த 17ம் தேதி கிளம்பிய ‘எக்ஸ்புளோரர்’ மிதவை பல்கலைக் கழக கப்பல், நேற்று சென்னை வந்தது. சென்னையில் ஐந்து நாட்கள் தங்கும் இவர்கள் சுற்றுப்புறச் சூழ்நிலை, மக்களின் கலாசாரம் ஆகியவற்றை அறிந்து கொண்டு, பழங்கால புராதனச் சின்னங்கள் பற்றி ஆய்வு செய்ய உள்ளனர்.


இதற்காக மகாபலிபுரம், காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றனர். மேலும், சென்னை நகரில் உள்ள பள்ளி, மருத்துவமனைகளுக்குச் சென்று, பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபடவுள்ளனர். இக்கப்பல் அக்., 27ம் தேதி சென்னையில் இருந்து வியட்நாம் புறப்பட்டுச் செல்கிறது.


‘செஞ்சுரி’ பயணம்:
மிதவை பல்கலைக் கப்பலான, ‘எம்.வி.எக்ஸ்புளோரர்’ கப்பல் இதுவரை 99 முறை சென்னை வந்துள்ளது. தற்போது 100வது முறையாக இக்கப்பல் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.


ஸ்டார் ஓட்டலுக்கு நிகர்:
‘எம்.வி., எக்ஸ்புளோரர்’ மிதவைப்  பல்கலைக் கழக கப்பல் பல்கலைக் கழகத்தைப் போன்றே பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு மாடிகளைக் கொண்ட இக்கப்பலில் வகுப்பறைகள், ஓய்வறைகள், விளையாட்டுக் கூடம், நீச்சல் குளம் மற்றும் ‘லிப்ட்’ என ஸ்டார் ஓட்டல்களுக்கு நிகராக அனைத்து நவீன வசதிகள் உள்ளன. கம்ப்யூட்டர் லேப் வசதியும் உள்ளது. நாட்டில் நடக்கும் அன்றாட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் செயற்கோள் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us