தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் மாணவர்களின் உடல் 22ம் தேதி சென்னை வருகை

தமிழ் மாணவர்களின் உடல் 22ம் தேதி சென்னை வருகை

தமிழ் மாணவர்களின் உடல் 22ம் தேதி சென்னை வருகை


UPDATED : ஆக 19, 2020 12:00 AM

ADDED : ஆக 19, 2020 11:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2020 12:00 AM ADDED : ஆக 19, 2020 11:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை;
ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த, தமிழக மாணவர்களின் உடல்கள், வரும், 22ம் தேதி சென்னை வந்தடையும் என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

ரஷ்யாவில் மருத்துவம் படித்த, தமிழக மாணவர்கள், மனோஜ், விக்னேஷ், மொஹமத் ஆஷிக், ஸ்டீபன் ஆகியோர், சமீபத்தில், வோல்கா நதியில் மூழ்கி இறந்தனர். அவர்களின் உடல்களை, தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினேன். அவரும் நடவடிக்கை எடுத்தார்.
மாணவர்களின் உடல், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு கொண்டு வரப்பட்டு, நேற்று இஸ்தான்புல் நகர் வந்தடைந்தது. வரும், 22ம் தேதி சென்னை வந்தடையும் என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கை எடுத்த, வெளியுறவு அமைச்சர் மற்றும் துாதரக அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us