தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தகவல் பாதுகாப்பு நிபுணராக வேண்டுமா?

தகவல் பாதுகாப்பு நிபுணராக வேண்டுமா?

தகவல் பாதுகாப்பு நிபுணராக வேண்டுமா?


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 11:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 11:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எல்லா நிறுவனங்களுக்கும் தகவல் சேகரிப்புக்கு முக்கியத்துவம் வழங்குகின்றன. தகவல்கள் எப்போதும், எளிதாக கிடைக்கும்படி பாதுகாத்து வைத்துக்கொள்ள நிபுணர்களின் உதவி அவசியம். பெரிய நிறுவனங்களிலேயே தகவல் பாதுகாப்பு நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. வரும் 2012ம் ஆண்டு தகவல் பாதுகாப்பு வல்லுனர்களின் தேவை உலக அளவில் 10 லட்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.


அரியானாவின் குர்கானில் அமைந்துள்ள ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டோரேஜ், இன்டகிரேஷன் அண்டு பியூச்சர் டெக்னாலஜி’ ( இன்சிப்ட்) நிறுவனம் டேட்டா ஸ்டோரேஜில் அறிமுக படிப்பு முதல் உயர்படிப்பு வரை வழங்குகிறது. எந்த சூழ்நிலையிலும் பணியாற்றும் திறன் பெற்ற தகவல் பாதுகாப்பு, மேலாண்மை அறிந்த நிபுணர்களை உருவாக்கும் வகையில் இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த படிப்பில் சேர ஏதேனும் ஐ.டி., சார்ந்த பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். ஐ.டி., அல்லது டேட்டா ஸ்டோரேஜ் சார்ந்த பணிகளில் ஆறு மாத அனுபவம் அவசியம். இந்த படிப்புக்கான கட்டணம் 31 ஆயிரத்து 500 ரூபாய். படித்து முடித்தவுடன் மாதம் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us