தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்., வழங்கும் ஜி.எம்.பி.ஏ.பி.,

ஐ.ஐ.எம்., வழங்கும் ஜி.எம்.பி.ஏ.பி.,

ஐ.ஐ.எம்., வழங்கும் ஜி.எம்.பி.ஏ.பி.,


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கள் பணியில் வளர்ச்சி இல்லை என்றும், தகுதியை உயர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் விரும்பும் பணியாளர்களுக்கு சிறப்பு படிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.


தற்போதைய பொருளாதார சிக்கல்களால், நிதித்துறை நிபுணர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தங்கள் துறை சார்ந்த அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சார்டட் அக்கவுன்டன்ட், காஸ்ட் அக்கவுன்டன்ட், கம்பெனி செக்ரெட்டரிகளுக்காக ‘ஜெனரல் மேனேஜ்மென்ட் புரோக்கிராம் பார் அக்கவுன்டிங் புரபஷனல்’ என்ற படிப்பை கோல்கட்டா ஐ.ஐ.எம்., வழங்கி வருகிறது.


இந்த படிப்பில் பினான்ஷியல் ரிஸ்க் மேனேஜ்மென்ட், பினான் ஷியல் ஸ்டேட் மென்ட்ஸ் அனாலிசிஸ், பிசினஸ் வேல்யுவேஷன், கார்பரேட் ரீஸ்டிரக்சரிங், ஸ்டாட்டர்ஜிக் பிளானிங் ஆப் ஹியூமன் ரிசோர்ஸ் வேல்யூஸ், குளோபல் காம்படிஷன் அண்டு ஸ்டாட்டர்ஜி போன்ற பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
பிசினஸ் ஸ்டாட்டர்ஜிஸ்ட், கார்பரேட் லீடர் போன்ற மூத்த மேலாண்மை பொறுப்புகளுக்கு ஏற்றவாறு கணக்கு பதிவியல் நிபுணர்கள் தங்கள் திறன்களை அதிகரித்துக்கொள்ளும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.


டில்லி மையத்திலும் இந்த படிப்பு வழங்கப்படுகிறது. பணிபுரிபவர்களுக்கு ஏற்றவாறு வகுப்புகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மாலையில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். இந்த படிப்பின் காலம் 18 மாதங்கள். இந்த படிப்புக் கான கட்டணம் 2.7 லட்ச ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us