தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரிட்டன் விசா தாமதம்

பிரிட்டன் விசா தாமதம்

பிரிட்டன் விசா தாமதம்


UPDATED : அக் 24, 2009 12:00 AM

ADDED : அக் 24, 2009 05:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2009 12:00 AM ADDED : அக் 24, 2009 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரிட்டனில் உயர் படிப்புகளைப் படிப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.


இந்த ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்கும் படிப்புகளில் சேருவதற்காக இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு விசா தருவதில் அந்த நாட்டு அரசு தாமதம் செய்து வருவதால் கல்வி வாய்ப்பு கிடைத்தும் மேற் கொள்ளமுடியாமல் இவர்கள் அவதியுறுவதாக பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.

அந்த நாட்டு பல்கலைக்கழகங்களின் வருமானத்தில் பெரும் பகுதி இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கட்டும் கட்டணத்தின் மூலமாகவே வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டு அரசு விசா தருவதில் மார்ச் முதல் கடுமையான நிபந்தனைகளை மேற்கொண்டு வருவது பல்கலைக்கழகங்களுக்குக் கடுமையான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


வெளிநாட்டு மாணவர்கள் குறித்த நேரத்தில் விசா பெற்று, பல்கலைக்கழகங்களில் சேராவிட்டால் அது பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை கடுமையாக பாதிக்கும் என்று நிதி ஆலோசகர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாட்டு மாணவர்களைப் போல 3 மடங்கு அதிகக் கட்டணம் செலுத்திப் படிக்கின்றனர்.


பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகங்களின் உயர்மட்டக் குழுவும் இந்தப் பிரச்னையை கவலையோடு அணுகி வருகிறது. கணிசமான மாணவர்கள் விசா நிபந்தனைகளால் குறித்த காலத்தில் படிப்பைத் தொடங்க முடியாத நிலையில் உள்ளனர் என்றும் அரசோ வெளிநாட்டு மாணவர்களை வரவேற்க விரும்பவில்லை என்று தோன்றுவதாகவும் இந்தக் குழு கருத்துத் தெரிவித்துள்ளது. அறிவு பூர்வமான கலாசார செறிவுள்ள மற்றும் நிதி தரும் அதிகத் திறன் கொண்ட வெளிநாட்டு மாணவர்களை வரவேற்பதில் அரசு காட்டும் சுணக்கம் ஆரோக்கியமானதல்ல என்று அது கூறியுள்ளது.


அங்குள்ள பல பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு மாணவர்கள் சேருவதற்கான கடைசித் தேதி நெருங்கி வருவதால் அதன் பின் வெளிநாட்டு மாணவர்கள் அங்குள்ள படிப்புகளில் சேர முடியாது. பாகிஸ்தானிலிருந்து விண்ணப்பித்தவர்களில் 14 பேருக்கு விசா விண்ணப்பங்கள் இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளன. எனினும் போதுமான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் இப்பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us