தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 24, 2020 12:00 AM

ADDED : ஆக 24, 2020 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2020 12:00 AM ADDED : ஆக 24, 2020 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., படிப்புகள் உள்ளன.
மேலும், உணவு கோழியின் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நடப்பு, 2020 - 21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதேபோல், வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.&'பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்&' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us