UPDATED : செப் 01, 2020 12:00 AM
ADDED : செப் 01, 2020 06:52 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மாணவர்களுக்கு உதவிடும் வகையில், கிண்டி, அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது.
தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், சென்னையில், கிண்டி, வடசென்னை, திருவான்மியூர், ஆர்.கே., நகர் உள்ளிட்ட பகுதிகளில், அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெறவும், தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க, சேர்க்கை துவங்கி உள்ளது.
இதற்கு, www.skilltraining.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதேபோல், மாணவர்களுக்கு உதவும் வகையில், கிண்டி பயிற்சி நிலையத்தில், சேர்க்கை உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையத்திலும் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
