தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக குறைவு

வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக குறைவு

வேலைவாய்ப்பின்மை 8 சதவீதமாக குறைவு


UPDATED : செப் 01, 2020 12:00 AM

ADDED : செப் 01, 2020 06:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2020 12:00 AM ADDED : செப் 01, 2020 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தொழில் நிறுவனங்கள் உட்பட, அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக, வேலைவாய்ப்பின்மை சதவீதம் ஏப்ரலில், 40 சதவீதமாக சரிந்தது. இது, தற்போது, 8 சதவீதமாக குறைந்துள்ளது.
தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:
 
ஊரடங்கால், தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம், ஏப்ரலில், 40 சதவீதமாக அதிகரித்தது. அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் காரணமாக, இது ஜூலையில், 8 சதவீதமாக குறைந்தது. மேலும், 42 தொழில் நிறுவனங்களுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, 31 ஆயிரத்து, 464 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது.
இதனால், 69 ஆயிரத்து, 712 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தற்போது, 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி வழங்கியிருப்பதால், வேலைவாய்ப்பின்மை மேலும் குறையும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us