தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தினத்தில் கவர்னர் மாளிகை முற்றுகையிட முடிவு

ஆசிரியர் தினத்தில் கவர்னர் மாளிகை முற்றுகையிட முடிவு

ஆசிரியர் தினத்தில் கவர்னர் மாளிகை முற்றுகையிட முடிவு


UPDATED : செப் 02, 2020 12:00 AM

ADDED : செப் 02, 2020 08:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2020 12:00 AM ADDED : செப் 02, 2020 08:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆசிரியர் தினத்தன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகஅரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் கவுரவ தலைவர் சேஷாசலம், தலைவர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி அரசு, நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் 2019 முதல் 9 மாதமாக சம்பளம், பென்ஷன் வழங்கவில்லை. சமீப காலமாக கல்வித்துறையும், அதிகாரிகளும் , ஆட்சியாளர்களும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். ஒன்றரை மாத ஊதியம் கோரி அனுப்பப்பட்ட சம்பள கோப்பு கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக சம்பள கோப்பு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் அதே வகையில் இந்த கோப்பும் அனுப்பப்பட்டது.
நிதி உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகளிடமிருந்து தேவையான தகவல்களை கேட்டு பெறுவதற்கு கவர்னர், அதிகாரிகளுக்கும் முழு உரிமையும், அதிகாரமும் உண்டு. எவ்வளவு தகவல்கள் வேண்டுமானாலும் அவர்களிடமிருந்து தாராளமாக பெற்றுக் கொள்ளலாம், அதற்காக ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷனை 9 மாதங்களாக நிறுத்தி வைப்பது கண்டிக்கத்தக்கது. 
அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் வரும் 4 ம் தேதி மாலை 5 மணி முதல் தலைமை தபால் நிலையம் எதிரில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். மறுநாள் செப்டம்பர் 5ந் தேதி ஆசிரியர் தினத்தன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது துணைத்தலைவர் ஆல்பெர்ட் மார்ட்டின், இணை செயலர்கள் வின்சென்ட், கோபால், பொருளாளர் சீத்தாலட்சுமி மற்றும் பொறுப்பாளர்கள் நிக்சன், பிரிட்டோ, பிரடரிக், ஸ்டாலின், அழகிரி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us