தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை: ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை


UPDATED : செப் 02, 2020 12:00 AM

ADDED : செப் 02, 2020 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2020 12:00 AM ADDED : செப் 02, 2020 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில கல்விக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. செப்டம்பர் வரை ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்நிலையில் கடந்த, 17 முதல் மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை துவங்கியது. கடந்த, 10 நாட்களில் அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஏழு லட்சத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக, ஆங்கில வகுப்புகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில கல்விக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல விஷயம்தான். ஆங்கில வழிக்கல்வியில், அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் ஆங்கில கல்விக்கு, ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லை. இந்நிலையில், டெட் தேர்வு முடித்து பணிக்கு காத்திருக்கும், ஆங்கில பட்டதாரிகளை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யலாம். தற்போது, மாணவர் சேர்க்கை குறித்த முழு விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் விரைவாக பதிவேற்றம் செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, மாணவர் சேர்க்கை குறித்த முழு புள்ளி விபரம் தெரியவரும். 
கொரோனாவால் வேலை இழப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு, உள்ளூர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்களிடம் ஏற்பட்ட ஆர்வம், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு மற்றும் அதிக கட்டணம், புதிய கல்வி கொள்கை, கற்றல் முறைகளில் கூடுதல் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us