தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி மையம் திறக்க அனுமதி
தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி மையம் திறக்க அனுமதி
UPDATED : செப் 24, 2020 12:00 AM
ADDED : செப் 24, 2020 11:19 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிற்சி மையங்களை விதிமுறைகளை பின்பற்றி திறக்க உயர்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள்:
ஒவ்வொரு குழுவினர் பயிற்சி முடித்ததும் தட்டச்சு இயந்திரம், மேஜை மாணவர்கள் அமரும் நாற்காலிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மாணவர்கள், ஊழியர்கள் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்து மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பணியாளர்கள் கையுறை அணிவது அவசியம். மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை, பல்ஸ், ஆக்ஸி மீட்டரால் சோதனை செய்து அனுமதிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் இடையே ௬ அடி இடைவெளி வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
