தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் தந்த யோசனை பின்பற்ற பள்ளிகள் தயார்

தினமலர் தந்த யோசனை பின்பற்ற பள்ளிகள் தயார்

தினமலர் தந்த யோசனை பின்பற்ற பள்ளிகள் தயார்


UPDATED : செப் 26, 2020 12:00 AM

ADDED : செப் 26, 2020 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2020 12:00 AM ADDED : செப் 26, 2020 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், அக்., 1 முதல் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், &'தினமலர்&' நாளிதழ் யோசனையான, இரண்டு ஷிப்ட் முறையை பின்பற்ற, ஏராளமான பள்ளி முதல்வர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
கொரோனா பரவலால், தமிழகத்தில் ஆறு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அக்., 1ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. &'பள்ளிகளில், இரண்டு ஷிப்ட் முறையை பின்பற்றினால், மாணவர்களுக்கு தேவையான சமூக இடைவெளி கிடைக்கும்&' என, சமீபத்தில், &'தினமலர்&' நாளிதழ் யோசனை கூறியது.
&'பள்ளி வாகனங்களிலும், போதுமான இடைவெளியோடு மாணவர்கள் பயணிக்கலாம்&' எனவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த யோசனைக்கு, ஏராளமான பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், மாணவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளி முதல்வர் பூமிநாதன் கூறியதாவது:

இரண்டு ஷிப்ட் முறை என்பது, பள்ளி நடத்துபவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.இதை பின்பற்றினால், பள்ளிகளில் மாணவர்கள் இடையே, போதிய சமூக இடைவெளி கிடைக்கும். மாணவர் கூட்டம் குறைவால், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை நன்றாக கவனிக்க முடியும். ஆசிரியர்களும், தனித்தனியே ஒவ்வொரு மாணவரையும் கவனித்து, சந்தேகங்களை தீர்க்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us