தனியார் கல்லுாரி நிலுவை தொகை 8 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு
தனியார் கல்லுாரி நிலுவை தொகை 8 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு
UPDATED : செப் 26, 2020 12:00 AM
ADDED : செப் 26, 2020 09:47 AM
அகில இந்திய தனியார்கல்வி நிறுவனங்கள் சங்கத்தின், மாநில பொதுச்செயலர் பழனியப்பன் தாக்கல் செய்த மனு:
தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவி தொகையை, அரசு வழங்குகிறது. 2017 முதல், கல்வி உதவி தொகை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது.
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு, மாணவர்களிடம் இருந்து பெறும் கட்டணத்தை வைத்தே, சம்பளம் வழங்க வேண்டும். எனவே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நிலுவை தொகையை, கல்வி நிறுவனங்களுக்கு வழங்க கோரி, அரசுக்கு மனு அனுப்பப்பட்டது; இம்மனு நிலுவையில் உள்ளது.எனவே, நிலுவை தொகையை வழங்கும்படி, அரசுக்கு உத்தர விட வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கப்பட்ட, அதே கல்வியாண்டில் உதவி தொகை கிடைக்கும் வகையில், திட்டம் வகுக்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, &'&'2017 முதல், கல்வி கட்டணம் வழங்கப்படவில்லை. சில கல்லுாரிகளுக்கு, கோடிக்கணக்கில் பாக்கி உள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த, காலக்கெடு வரையறுக்க வேண்டும,&'&' என்றார்.
இதையடுத்து, நீதிபதி ரவிச்சந்திரபாபு, &'&'மனுதாரர்கள் தரப்பில், 2020 ஜூன் மாதத்தில் அரசுக்கு அளிக்கப்பட்ட மனுவை, தகுதி அடிப்படையில் பரிசீலித்து, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,&'&' என உத்தரவிட்டார்.
