பி.எஸ்சி., நர்சிங் அட்மிஷன்; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பி.எஸ்சி., நர்சிங் அட்மிஷன்; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
UPDATED : அக் 02, 2020 12:00 AM
ADDED : அக் 02, 2020 06:33 PM
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 2020 - 21ம் கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரி இடங்கள், தனியார் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய, வரும், 15ம் தேதி கடைசி நாள்.
மின்னஞ்சல்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான சான்றிதழ்களுடன், &'செயலர், தேர்வுக்குழு, 162, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை, 10&' என்ற முகவரிக்கு, தபால் வாயிலாக, வரும், 17ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம், 400 ரூபாய். இந்த தொகையை, டெபிட், கிரடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை வாயிலாக செலுத்தலாம்.
மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், &'The secretary, selection committee, kilpauk, chennai - 10&' என்ற பெயரில் வரைவோலையாகவும் செலுத்தலாம். பட்டியல் இனத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணம் செலுத்துவதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, 98842 24648; 98842 24649; 98842 24745; 98842 24746 என்ற எண்களிலும், paramedicalselection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை
ஆண்டுதோறும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்த பின், துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக, &'நீட்&' தேர்வு தாமதமாக நடந்தது. எனவே, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை விரைந்து முடிக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
