தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழலையர் முகங்களில் உருவான டி.வி.ஆர்., ஓவியம்

மழலையர் முகங்களில் உருவான டி.வி.ஆர்., ஓவியம்

மழலையர் முகங்களில் உருவான டி.வி.ஆர்., ஓவியம்


UPDATED : அக் 02, 2020 12:00 AM

ADDED : அக் 02, 2020 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2020 12:00 AM ADDED : அக் 02, 2020 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:
&'தினமலர்&' நிறுவனர் &'டி.வி.ஆர்.,&' 112வது பிறந்த நாளையொட்டி, பழநி ஓவிய ஆசிரியர் அன்புச்செல்வன், ௨,௦௦௦ குழந்தைகள் முகங்களை பயன்படுத்தி, அவரது ஓவியத்தை வரைந்துள்ளார். 
திண்டுக்கல் மாவட்டம், பழநி சத்திரப்பட்டி அரசு பள்ளி ஓவிய ஆசிரியரான இவர், தமிழக அரசின், &'கலைவளர்மணி&' பட்டம் மற்றும், &'தமிழ்நாடு புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' சான்றிதழ் பெற்றுள்ளார்.
டி.வி.ஆர்., பிறந்த நாளையொட்டி, எட்டு ஆண்டுகளாக, &'தினமலர்&' பிறந்தநாள் வாழ்த்து பகுதியில் வெளியான குழந்தைகளின் முகங்களை பயன்படுத்தி, &'டி.வி.ஆர்&' உருவத்தை கண்முன் நிறுத்துகிறார்.
அன்புச்செல்வன் கூறியதாவது:
பள்ளிப் பருவம் முதல் கடைசி காலம் வரை, தாழ்த்தப்பட்டோர் மீது, டி.வி.ஆர்., தனிப்பாசம் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்டோரை ஒன்றிணைக்க, அவர்களின் வீடுகளுக்கு சென்று, தாம்பூலம் வைத்து அழைக்க அறிவுறுத்தி, அதன்படியே செய்தார் என்பதையும் அறிந்தேன்.
இத்தகைய சமூக பணியால், அவர் மீது எனக்கு ஈர்ப்பு எற்பட்டது. ஆண்டுதோறும் அவரது உருவப்படத்தை வரைவது திருப்தி அளிக்கிறது. இப்படத்தை வரைய, &'தினமலர்&' நாளிதழின் பிறந்த நாள் பகுதியில் வெளியான, 2,000 குழந்தைகளின் முகங்களை பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இவரை பாராட்ட:
99434 35928.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us