தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணையதள வசதி இல்லை 52 கிராம மாணவர்கள் தவிப்பு

இணையதள வசதி இல்லை 52 கிராம மாணவர்கள் தவிப்பு

இணையதள வசதி இல்லை 52 கிராம மாணவர்கள் தவிப்பு


UPDATED : அக் 04, 2020 12:00 AM

ADDED : அக் 04, 2020 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2020 12:00 AM ADDED : அக் 04, 2020 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிலையில், தமிழகத்தில் மலை பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளாக உள்ள, 52 கிராமங்களில், இணையதள இணைப்புகள் இல்லாததால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, அந்த பின்தங்கிய பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, கல்வி துறையின் ஆன்லைன் பயிற்சி வகுப்பையும் நடத்த முடியவில்லை.
இது குறித்து, பெற்றோரும், ஆசிரியர்களும் கல்வி துறையில் புகார் செய்துள்ளனர். திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம், திருவள்ளூர்போன்ற மாவட்டங்களில், இந்த பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.இந்த கிராமங்களில், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமின்றி, கல்வி, &'டிவி&'யும் ஒளிபரப்பாகவில்லை.
ஏனெனில், இந்த கிராமங்களில், கேபிள் இணைப்புகளும் இல்லை.இதனால், அந்த பகுதியில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு, இந்த கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்துவது எப்படி என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us