UPDATED : அக் 04, 2020 12:00 AM
ADDED : அக் 04, 2020 08:54 PM
சென்னை:
சென்னையில், மூன்றாவது மற்றும் எல்.கே.ஜி., படிக்கும் சகோதரியர் இருவர், &'இந்தியா மற்றும் ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
&'இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' மற்றும் &'ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' சார்பில், சாதனை குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, நேற்று கிண்டியில் நடந்தது.தேசியக் கொடிஇதில், சுங்கத் துறை இணை ஆணையர் சமயமுரளி - பிரவீனா தம்பதியின், மகள்கள் சாராஸ்ரீ, 4, சனாஸ்ரீ, 7, ஆகியோர் பங்கேற்றனர். இதில், சாராஸ்ரீ, ஒரு நிமிடத்தில், தனித்தனி புகைப்படங்களை பார்த்து, 50 விளையாட்டுகளின் பெயர்களை கூறி, &'இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' புத்தகத்தில் இடம் பிடித்தார்.
அதேபோல், சனாஸ்ரீ, 4.25 நிமிடத்தில், 206 நாடுகளின் தேசியக் கொடி புகைப்படங்களை பார்த்து, அதன் நாடு மற்றும் தேசிய விலங்குகளின் பெயர்களை கூறி, &'ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
நினைவாற்றல்
இந்நிகழ்ச்சியை, &'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏஷியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்&' நடுவர், விவேக் முன்னின்று நடத்தி, சிறுமியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், சிறுமியின் பெற்றோர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியை ஷரீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து, சமயமுரளி- பிரவீனா தம்பதி கூறியதாவது:
இரு மகள்களுக்கும், நினைவாற்றல் அதிகம் இருப்பதை, அவர்களுடைய நடவடிக்கைகளை கவனித்து தெரிந்து கொண்டோம். பள்ளிப்படிப்பை கடந்து, இருவருக்குள் தனித்திறமை இருப்பதை அறிந்து, உரிய பயிற்சி வழங்கி, இந்த போட்டியில் பங்கேற்க வைத்தோம். அடுத்து, &'கின்னஸ்&' சாதனை படைக்க, இருவரையும் தயார் செய்ய உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பயிற்சியாளர் ஷரீபா கூறுகையில், &'&'என் மகளின் தனித்திறமையை பார்த்து தான், நான் பயிற்சியாளர் ஆனேன். &'&'ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்திறமைகள் உள்ளன. அதை கூர்ந்து கவனித்து, வெளி கொண்டு வரும் பொறுப்பு, ஒவ்வொரு பெற்றோரிடமும் உள்ளது,&'&' என்றார்.
