தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே தினக்கூலி பணி நியமனத்துக்கு உத்தரவு

வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே தினக்கூலி பணி நியமனத்துக்கு உத்தரவு

வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே தினக்கூலி பணி நியமனத்துக்கு உத்தரவு


UPDATED : அக் 04, 2020 12:00 AM

ADDED : அக் 04, 2020 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2020 12:00 AM ADDED : அக் 04, 2020 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
&'தினக்கூலி பணியாளர் நியமனத்தை, வேலைவாய்ப்பகம் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்&' என, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை செல்லுார் பாண்டியராஜா, திருநெல்வேலி மணிமுத்தாறு மாரியப்பன் உட்பட, 20 பேர் தாக்கல் செய்த மனு: பொதுப்பணித் துறையில், தினக்கூலிகளாக, &'நாமினல் மஸ்டர் ரோல்&' எனும், என்.எம்.ஆர்., பணியாளர்களாக, 2013ல் சேர்ந்தோம். தற்காலிகம், என்.எம்.ஆர்., ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க, உயர் நீதிமன்றக் கிளை, 2019ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. பணியில் உள்ள, 2,406 என்.எம்.ஆர்., பணியாளர்களுக்கு மாதம், 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து, பொதுப்பணித் துறை 2019 செப்., 13ல் அரசாணை வெளியிட்டது. பின், 3,407 என்.எம்.ஆர்.,களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்து, 2019 டிச., 6ல் அரசாணை வெளியானது.
இப்பயனாளிகள் பட்டியலில், எங்கள் பெயர்களை சேர்க்கவில்லை. எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மறுக்கபட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பள பயனாளிகள் பட்டியலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 பேர் என்.எம்.ஆர்., ஊழியர்களாக இடம் பெற்றுள்ளனர். பொறியியல் பட்டம் பெற்றவர்கள், நிர்ணயிக்கப்பட்ட தகுதி இல்லாதவர்கள், போலிச் சான்றுகள் அடிப்படையில், பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களை, தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். அரசுத் தரப்பில், &'மனுதாரர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகின்றனர். மனுதாரர்களில் மூவர் மட்டுமே, தினக்கூலியாக நியமிக்கப்பட்டனர். அவர்களும் ஒரு கட்டத்தில் வேலையை விட்டு சென்றனர்&' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு:

இவ்விவகாரத்தை, இந்தநீதிமன்றம் ஆராய்வது சாத்தியமற்றது. மனுதாரர் களில் மூன்று பேரைத் தவிர, மற்றவர்கள் நிவாரணம் கோர உரிமை இல்லை. மூன்று பேரும் நேரடியாக தினக்கூலியாக நியமிக்கப்பட்டதற்கு, பொதுப்பணித் துறை சான்றளித்துள்ளது. அவர்களுக்கு தொடர்பணி வழங்க பரிசீலிக்க வேண்டும். மற்ற, 17 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வரும் காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரை மூலம் மட்டுமே தினக்கூலி பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
நேரடி நியமனம் கூடாது. நியமனத்திற்கு வயது, கல்வி, உடற்தகுதியை நிர்ணயிக்க வேண்டும். அதிகபட்சம் பிளஸ் 2வை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்களை, பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us