இன்னும் மூன்று மாதங்களில் தயாராக உள்ள ஆக்ஸ்போர்டு வாக்ஸின்!
இன்னும் மூன்று மாதங்களில் தயாராக உள்ள ஆக்ஸ்போர்டு வாக்ஸின்!
UPDATED : அக் 04, 2020 12:00 AM
ADDED : அக் 04, 2020 08:58 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. ரஷ்யா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக முன்னதாக அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து சோதனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உலகுக்கு கொரோனாவை பரப்பியதாக குற்றம் சாட்டப்படும் சீனா இதற்கு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறது சீனாவை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மூன்றாம்கட்ட தடுப்புமருந்து சோதனைக்கு தயாராகிவிட்டன. உலக நாடுகளின் தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்துவருகிறது. இந்நிலையில் வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரிட்டன் தடுப்பு மருந்தை இன்னும் மூன்றே மாதங்களில் கண்டுபிடித்துவிடும் என உறுதியாகக் கூறுகிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலை., விஞ்ஞானிகள் இதற்கான தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆக்ஸ்போர்ட் வாக்ஸின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வரும் 2021 ஜனவரி மாதம் இந்தத் தடுப்பு மருந்து விற்பனைக்கு வெளியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிதாகப் பேசப்படும் ஆஸ்ரா செனேகா தடுப்பு மருந்து பிரிட்டனில் சோதனை செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
