தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியின் தரம் ஒரு படி மேலே...! நனவானது 25 ஆண்டு கால கனவு!

பள்ளியின் தரம் ஒரு படி மேலே...! நனவானது 25 ஆண்டு கால கனவு!

பள்ளியின் தரம் ஒரு படி மேலே...! நனவானது 25 ஆண்டு கால கனவு!


UPDATED : அக் 07, 2020 12:00 AM

ADDED : அக் 07, 2020 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2020 12:00 AM ADDED : அக் 07, 2020 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்:
ஆனைகட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின், 25 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைகட்டியில், தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், பழங்குடியினருக்கான உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 213 மாணவ, மாணவியரும், 11 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி மாணவ, மாணவியர் கணிசமான அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர், அங்கிருந்து, 20 கி.மீ., தொலைவில் உள்ள சின்னதடாகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டும். மேலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேர, கோவை அல்லது சின்னதடாகம் வரவேண்டும். இதனால், ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், மேல்நிலைப்பள்ளி சேர முடியாமல், தங்கள் படிப்பை பாதியிலேயே கைவிடும் அவலம் நீடித்து வந்தது. எனவே, ஆனைகட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற, தமிழக அரசு, கடந்த ஆக., மாதம் ஆனைகட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி உத்தரவிட்டது.மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யவும், அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கவும், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவுகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஆனைகட்டி சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், &'&'இங்கு, கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் சேர்க்கையை, வரும் கல்வி ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளது. இதை கைவிட்டு, நடப்பாண்டிலேயே பிளஸ் 1 வகுப்புகளை துவக்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us