UPDATED : அக் 07, 2020 12:00 AM
ADDED : அக் 07, 2020 10:50 AM
மதுரை:
மதுரை மாவட்டத்தில் 988 காலி சத்துணவு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று மாலை வரை நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை அளித்தனர்.
இம்மாவட்டத்தில் மாநகராட்சி, திருமங்கலம் நகராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களில் காலியான 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் வினய் அறிவித்தார். கடைசி நாளான நேற்று நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். சிலர் கலெக்டர் அலுவலக சத்துணவு பிரிவில் குவிந்தனர். அவர்களை அந்தந்த ஒன்றியங்களில் விண்ணப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
விண்ணப்பங்கள் இன்றும், நாளையும் (அக்., 6, 7) சரிபார்க்கப்படும். தேவையான சான்றுகள் இல்லாதபட்சத்தில் அவை தகுதியற்றவையாக கருதப்படும். தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். கலெக்டர் நேரடி மேற்பார்வையில் இவை நடக்கிறது.
