2 ஆண்டு அரசு மருத்துவமனை பணி நிபந்தனை சரி: ஐகோர்ட்
2 ஆண்டு அரசு மருத்துவமனை பணி நிபந்தனை சரி: ஐகோர்ட்
UPDATED : அக் 07, 2020 12:00 AM
ADDED : அக் 07, 2020 11:21 AM
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்பு முடிப்பவர்கள், அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, அவர்களின் சான்றிதழ்கள், அரசு வசம் இருக்கும் என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
விசாரிப்பு
இந்த நிபந்தனைகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 200க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், &'அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, இப்படிப்பட்ட நிபந்தனை இல்லை. அவ்வாறு இருந்தாலும், அரசு உத்தரவு இன்றி, அந்த நிபந்தனைகள் பொருந்தாது. அதனால், எங்களுக்கு உரிய சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும்&' என, கூறப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களின் சான்றிதழ்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மாணவர்கள் தரப்பிலும், &'உத்தரவாத பத்திரம் எழுதி கொடுப்பதால், அரசு மற்றும் பல்கலை சான்றிதழ்களை தக்க வைத்துக் கொள்ள முடியாது. கட்டாய பணி நிபந்தனையும், சான்றிதழ்களை தக்க வைப்பதும், சட்டவிரோதமானது&' என, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், சிறப்பு பிளீடர் பாப்பையா ஆஜராகினர்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
முதுநிலை மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெறுபவர்கள், நியமன உத்தரவுக்காக, இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில், அவர்கள் வேறு படிப்பு படிக்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என்பது அல்ல. இரண்டு ஆண்டுகளுக்குள், அரசிடம் இருந்து பணி உத்தரவு வந்தால், அவர்கள் பார்த்து கொண்டிருந்த வேலையை விட வேண்டியது வரும்.
நிபந்தனைகளின்படி, இரண்டு ஆண்டுகளில் பணி வழங்க, அரசு தவறினால், அந்த இரண்டு ஆண்டுகள் முடிந்த பின், அவர்களுக்கான சான்றிதழை, அரசு திருப்பி தந்து விட வேண்டும்.
ரத்து
தேர்ச்சி பெற்றவர்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்று கூறுவதை, நியாயமற்றது எனக் கூற முடியாது. மாநில மக்கள், சிறப்பான மருத்துவ சேவையை பெற வேண்டும் என்பது தான் நோக்கம். அதற்காக, வேலை தருவதாக கூறி, கால வரையின்றி காத்திருக்க வைக்க முடியாது.இரண்டு ஆண்டுகளில் பணி வழங்கவில்லை என்றால், மாணவர்களுக்கான சான்றிதழை, ஒப்படைத்து விட வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு, உத்தரவாத பத்திரம் அளிப்பதில் விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
