தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்ணில் வியத்தகு சாதனை படைப்போம்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

விண்ணில் வியத்தகு சாதனை படைப்போம்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

விண்ணில் வியத்தகு சாதனை படைப்போம்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்


UPDATED : அக் 08, 2020 12:00 AM

ADDED : அக் 08, 2020 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2020 12:00 AM ADDED : அக் 08, 2020 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
&'&'ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி மூலம், விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி தொழில்களில், முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பெறுவதே நமது இலக்கு,&'&' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்கா விமான படை பயிற்சி தளத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில், 2021, பிப்., 3 முதல் 7 வரை, 13வது சர்வதேச விமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத், ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன், டில்லியிலிருந்து காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். 
இந்த கூட்டத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பேசியதாவது:

&'அதிதி தேவோ பவா&' என்ற, விருந்தினர்கள், தெய்வத்திற்கு ஒப்பாவர் என்ற வாக்கியத்தில் நம்பிக்கை கொள்பவர்கள் நாம். இந்திய அமைதிக்காக, ராணுவம் மேலும் பலப்படுத்தப்படும். ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. விமான கண்காட்சி மூலம், விமானம் மற்றும் விண்வெளி தொழில்களில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா இடம்பெறுவதே நமது இலக்கு. இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், கர்நாடக முதல்வர், எடியூரப்பா, ராணுவ இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், பல நாடுகளின் துாதர்கள், கர்நாடக தலைமை செயலர் விஜயபாஸ்கர் உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us