தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானொலி வாயிலாக வகுப்புகள் முஸ்லிம் கல்வி வாரியம் திட்டம்

வானொலி வாயிலாக வகுப்புகள் முஸ்லிம் கல்வி வாரியம் திட்டம்

வானொலி வாயிலாக வகுப்புகள் முஸ்லிம் கல்வி வாரியம் திட்டம்


UPDATED : அக் 08, 2020 12:00 AM

ADDED : அக் 08, 2020 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2020 12:00 AM ADDED : அக் 08, 2020 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, வானொலி வாயிலாக வகுப்புகள் நடத்த, முஸ்லிம் கல்வி வாரியம் முடிவு செய்துஉள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்துள்ளது. &'ஆன்லைன்&' இம்மாநிலத்தில், முஸ்லிம் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படும், 614 பள்ளிகளில் முஸ்லிம் அல்லாதோர் உட்பட, ஆறு லட்சத்துக்கும் மேலான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பின்தங்கிய கிராமங்களில் வசிக்கின்றனர்.
முஸ்லிம் கல்வி வாரியம் சார்பில், கடந்த மூன்று மாதங்களாக, மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு இணைய வசதிகள் முழுமையாக கிடைக்காதது மற்றும் அவற்றை பெற கட்டணம் செலுத்த வேண்டியது போன்ற பிரச்னைகள் உள்ளன. இதனால், வகுப்புகளை தொடர முடியாமல் அவதிப்படும் மாணவர்களுக்காக, வானொலி வாயிலாக வகுப்புகளை நடத்த, முஸ்லிம் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இணைய சேவைஇதுகுறித்து, வாரிய தலைவர் அபுதாஹிர் கமரு தீன் நேற்று கூறியதாவது: எங்கள் கல்வி வாரிய பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. மால்டா, முர்ஷிதாபாத் உட்பட சில மாவட்டங்களில், பின்தங்கிய கிராமங் களில் வசிப்போர்,இணைய சேவை கிடைக்காமல் வகுப்புகளை தொடர இயலாத நிலை உள்ளது. இவர்களுக்காக, அடுத்த வாரம் முதல், வானொலி வாயிலாக வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கென பாட வாரியாக, குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அதுகுறித்து, ஆசிரியர் குழு தீர்மானிக்கும். இந்த வகுப்புகளை விவித் பாரதி, ஏர் சிலிகுரி மற்றும் ஏர் முர்ஷிதாபாத் ஆகிய வானொலி நிலையங்கள் ஒலிபரப்பும். இது, மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us