தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட படிப்பு கவுன்சிலிங் தடை விதிக்க கோர்ட் மறுப்பு

சட்ட படிப்பு கவுன்சிலிங் தடை விதிக்க கோர்ட் மறுப்பு

சட்ட படிப்பு கவுன்சிலிங் தடை விதிக்க கோர்ட் மறுப்பு


UPDATED : அக் 10, 2020 12:00 AM

ADDED : அக் 10, 2020 12:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2020 12:00 AM ADDED : அக் 10, 2020 12:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொழில்நுட்ப கோளாறு

நாட்டில் உள்ள, 23 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில், மாணவர் சேர்க்கைக்காக, கிளாட் எனப்படும், பொது நுழைவுத் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டுக்கான நுழைவுத்தேர்வு, கடந்த, 28ல் நடந்தது. &'ஆன்லைன்&' வாயிலாக நடந்த இந்த தேர்வில், தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாகவும், சில கேள்விகளுக்கான விடைகள், சரியாக பதிவாகவில்லை என்றும் புகார் எழுந்தது.

குறை தீர்க்கும் குழு

இதையடுத்து, பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரி, தேர்வு எழுதிய மாணவர்களில் ஐந்து பேர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

இதுபோன்ற புகார்களை கவனிப்பதற்காகவே, முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில், குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. உங்கள் குறைகளை, இரு நாட்களுக்குள், அந்த குழுவிடம் சமர்ப்பியுங்கள். உங்கள் புகார் குறித்து, அவர்கள் முடிவெடுப்பர். எனவே, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்குக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us