தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

பள்ளிகள் இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி

பள்ளிகள் இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதி


UPDATED : அக் 15, 2020 12:00 AM

ADDED : அக் 15, 2020 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2020 12:00 AM ADDED : அக் 15, 2020 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: 
கொரோனா ஊரடங்கில் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகிறது. பள்ளிகள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அதில், நான்கு கட்டமாக, பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கில் ஐந்தாம் கட்ட தளர்வுகள், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு முறைகளை மத்திய அரசு கடந்த, 1ம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, இன்று முதல், பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இது பற்றி, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி, மஹாராஷ்டிரா உட்பட சில மாநிலங்கள், பள்ளிகளை இப்போது திறக்கப்போவதில்லை என, அறிவித்துள்ளன. 
உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில், 19ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தாலும், நேரில் வர அச்சப்படும் மாணவர்களுக்கு, &'ஆன்லைன்&' வாயிலாக வகுப்புகள் தொடர வேண்டும்.
பள்ளிக்கு நேரில் வர விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீச்சல் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு மட்டும், நீச்சல் குளங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு நேரத்தில், 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. பங்கேற்கும் வீரர்கள், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.எனினும், இந்த தளர்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பொருந்தாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us