டில்லி பல்கலைக்கழகத்தில் 100 சதவீத கட் ஆப் மதிப்பெண்
டில்லி பல்கலைக்கழகத்தில் 100 சதவீத கட் ஆப் மதிப்பெண்
UPDATED : அக் 15, 2020 12:00 AM
ADDED : அக் 15, 2020 09:07 AM
புதுடில்லி:
கொரோனா பரவலால், மாணவர் சேர்க்கை தாமத மாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், டில்லி பல்கலைக்கழகத்தில், சில பாடப்பிரிவுகளுக்கு, 100 சதவீத &'கட் ஆப்&' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுதும் உள்ள பல்கலைகள், &'ஆன்லைன்&' வாயிலாக, வகுப்புகளை நடத்தி வருகின்றன. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை யும், மூன்று மாதங்கள் தாமதமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டில்லி பல்கலையின் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான, முதல் கட்ட கட் ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில், லேடி ஸ்ரீராம் கல்லுாரியில், அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் உளவியல் பாடப்பிரிவுக்கு, 100 சதவீத கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். இதையடுத்து, கட் ஆப் மதிப்பெண்ணில், 100 சதவீதம் என்பது, எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. எந்தெந்த காரணிகளின் அடிப்படையில், சிறந்த மற்றும் நியாயமான கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுகின்றன போன்ற கேள்விகளை, பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகின்றனர்.
