துணைவேந்தர் சுரப்பாவை டிஸ்மிஸ் செய்யக் கோரி தி.மு.க., போராட்டம்
துணைவேந்தர் சுரப்பாவை டிஸ்மிஸ் செய்யக் கோரி தி.மு.க., போராட்டம்
UPDATED : அக் 16, 2020 12:00 AM
ADDED : அக் 16, 2020 05:45 PM
அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவை, டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; அப்பல்கலை, மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இறுதிவரை தொடரும் வகையில், தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் என, தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க., மாணவரணி, இளைஞரணி சார்பில், தமிழகம் முழுதும், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகள் முன் போராட்டம் நடந்தது.
சென்னை, கிண்டி காந்திமண்டபம் அருகில் நடந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த, இளைஞரணி செயலர் உதயநிதி பேசியதாவது:
மத்திய அரசுக்கு, அ.தி.மு.க., அரசு அடிபணிந்து செல்கிறது; கல்வியை முடக்க பார்க்கின்றனர். இன்ஜினியர் கல்வியை தடுக்க திட்டமிட்டு உள்ளனர். கல்வி கட்டணம் உயரும். துணைவேந்தர் சுரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இந்த போராட்டம் தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.
மதுரை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தனுஷ்குமார் எம்.பி., டாக்டர் சரணவன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி உட்பட, 27 மாவட்டங்களில், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர்.
மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
தமிழக மாணவர்களான அத்னான், கேசவன், அருண் ஆகியோர் தயாரித்த, சிறியவகை செயற்கை கோள், நாசா விண்வெளி மையத்தில் இருந்து, விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன். அந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கரூர் மாவட்ட தி.மு.க., சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதியை வழங்கிஉள்ளேன். அனைத்து துறைகளிலும் நம், தமிழக மாணவர்கள் தலைநிமிர வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
