ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் அரியர்ஸ் மாணவர்கள் அதிருப்தி
ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் அரியர்ஸ் மாணவர்கள் அதிருப்தி
UPDATED : நவ 02, 2009 12:00 AM
ADDED : நவ 02, 2009 11:24 AM
காஞ்சிபுரம் ஒரே நாளில் காலை மற்றும் மாலையில் தேர்வு எழுதும் வகையில், சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு அட்டவணை வெளியாகியிருப்பது, "அரியர்ஸ்&' வைத்திருக்கும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு இம்மாதம் துவங்குகிறது. ஒரு செமஸ்டர் தேர்வுகளில், தோல்வியுறும் மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை அடுத்த செமஸ்டரில் எழுதி தேர்ச்சி பெறலாம். சிலர் படிப்பு காலம் முடிந்த பின்னரும் தேர்ச்சிப் பெறாத பாடங்களை எழுதி தேர்ச்சி பெறுவதும் உண்டு.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இதன்படி, அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள், ஒரே நாளில் இரண்டு தேர்வு எழுத வேண்டிய வகையில், அட்டவணை அமைக்கப் பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்சி., வேதியியல் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி காலை மூன்றாவது செமஸ்டருக்குரிய ஆர்கானிக் கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெறுகிறது. மதியம் நான்காவது செமஸ்டருக்குரிய தேர்வு நடைபெறுகிறது. அதேபோல் 12ம் தேதி காலை மூன்றாவது செமஸ்டருக்குரிய இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி தேர்வு, மாலை நான்காவது செமஸ்டருக்குரிய இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி தேர்வு நடைபெற உள்ளது.
பி.எஸ்சி., வேதியியல் மாணவர்களுக்கு 5ம் தேதி காலை மூன்றாவது செமஸ்டருக்குரிய ஆங்கிலப் பாடம் தேர்வு, மதியம் இரண்டாவது செமஸ்டருக்குரிய ஆங்கிலப் பாடம் தேர்வு நடைபெறுகிறது. இதனால், போன செமஸ்டரில் நடந்த தேர்வுகளில், "அரியர்ஸ்&' வைத்திருக்கும் மாணவர்கள் காலையும், மதியமும் தேர்வு எழுத வேண்டியுள்ளது. ஒரு நாள் ஒரு தேர்வு மட்டும் எழுதும் வகையில் தேர்வு அட்டவணையை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டால், படிப்பதற்கு எளிதாக இருக்கும் என, மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
