தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு சேர்க்கை

பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு சேர்க்கை

பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு சேர்க்கை


UPDATED : அக் 28, 2020 12:00 AM

ADDED : அக் 28, 2020 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2020 12:00 AM ADDED : அக் 28, 2020 08:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஒருங்கிணைந்து நடத்தும் இவ்வாண்டிற்கான பி.இ.,/பி.டெக்., நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் மலையாளமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறியது:

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுாரிகளில் இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கைக்கு 81,042 இடங்களுக்கு 10,655 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தகுதியுள்ள 8023 மாணவர்களுக்கான தரவரிசை, இணையதள கலந்தாய்வு விபரங்கள் www.acgcetlea.com மற்றும் www.tnlea.com என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (அக்.27) சிறப்பு கலந்தாய்வும், அக்.28 முதல் நவ.7 வரை பொது கலந்தாய்வும் ஆன்லைனில் நடைபெறுகிறது.
மாணவர்கள் தரவரிசை நிலையையும்,கலந்தாய்வு தேதியையும் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்கள் தங்களின் அலைபேசி மற்றும் மின்னஞ்சல் உதவியுடன் கல்லுாரி விருப்ப பதிவை சமர்ப்பிக்கலாம். மேலும், ஏ.ஐ.சி.டி.இ., வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி டிப்ளமோ படிப்பில் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இரண்டாமாண்டு நேரடி பொறியியல் சேர்க்கையில் தாங்கள் விரும்பிய எந்தவொரு பாடப்பிரிவிலும் சேர்க்கை பெறலாம்.
ஒதுக்கீடு பெற்ற கல்லுாரிகளை அதற்காக ஒதுக்கப்பட்ட நாட்களில் உறுதி செய்வது அவசியம். இறுதி ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின்னர் அதற்கான ஆணையை பதிவிறக்கம் செய்து தக்க கல்லுாரியில் அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்து சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us