தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட கல்லுாரி பேராசிரியர் நியமன அறிவிப்பு ரத்து

சட்ட கல்லுாரி பேராசிரியர் நியமன அறிவிப்பு ரத்து

சட்ட கல்லுாரி பேராசிரியர் நியமன அறிவிப்பு ரத்து


UPDATED : நவ 02, 2020 12:00 AM

ADDED : நவ 02, 2020 08:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2020 12:00 AM ADDED : நவ 02, 2020 08:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு சட்ட கல்லுாரிகளில், பேராசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு, அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சட்ட கல்லுாரிகளில் காலியாக உள்ள, 82 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை, ஜனவரியில், தமிழக சட்ட பல்கலை வெளியிட்டது.
இதன்படி, 15 பேராசிரியர்கள், 28 இணை பேராசிரியர்கள், 35 உதவி பேராசிரியர்கள், 3 உதவி நுாலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குனர் பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தன. பிப்ரவரி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, புதிய பணியிடங்களை நிரப்ப, அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என, தமிழக அரசு அறிவித்தது. மேலும், சட்ட பேராசிரியர் பதவிக்கு, மத்திய அரசின் பல்கலைகளில், ஒரு ஆண்டு மட்டும், முதுநிலை எல்.எல்.எம்., படித்தவர்களும் விண்ணப்பித்தனர். 
ஆனால், தமிழகத்தில் எல்.எல்.எம்., சட்டப்படிப்பு, இரண்டு ஆண்டுகள் நடத்தப்படுவதால், இரண்டு ஆண்டுகள் படித்தவர்களுக்கே, பணி வாய்ப்பு வழங்க முடியும் என , மாநில அரசின் விதிகள் கூறுகின்றன. எனவே, பல்கலையின் பணி நியமன விதிகள் மற்றும் கல்வி தகுதியில், உரிய சட்ட விளக்கம் பெற்ற பின், காலியிடங்களை நிரப்ப, தமிழக சட்டத்துறை முடிவு செய்தது.
இதையடுத்து, ஜனவரியில் வெளியிடப்பட்ட பணி நியமன அறிவிப்பு, நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி தரப்படும் என, பல்கலை பதிவாளர், ஆபிரஹாம் உம்மன் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us