தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியாளர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்ய வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பொறியாளர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்ய வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பொறியாளர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்ய வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


UPDATED : நவ 26, 2020 12:00 AM

ADDED : நவ 26, 2020 10:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2020 12:00 AM ADDED : நவ 26, 2020 10:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
வீட்டுவசதி வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற பொறியாளர்களுக்கு உரிய கல்வித் தகுதி உள்ளதா என ஆய்வு செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மேலமாசி வீதி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் இளநிலை பொறியாளர்களாக, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் உதவி பொறியாளர்களாக வீட்டுவசதி வாரியத்தில் நியமிக்கப்படுகின்றனர். அடுத்த பதவி உயர்வு உதவி செயற்பொறியாளர். இதற்காக பட்டயப் படிப்பு முடித்தவர்கள் தொலைநிலைக் கல்வி மூலம் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கின்றனர்.
இவர்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் பொறியியல் பட்டம், பதவி உயர்வு செல்லாது.தொலைநிலைக் கல்வியில் பெறும் பொறியியல் பட்டத்தை, நேரடியாக கல்லுாரியில் பயின்று பெற்ற பொறியியல் பட்டத்திற்கு இணையானதாக கருத முடியாது.
குறைந்த, நடுத்தர, உயர் வருவாய்ப் பிரிவினருக்கான அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணியை உதவி செயற்பொறியாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர். அவர்களுக்கு அங்கீகரிக்கப் பட்ட கல்வித் தகுதி இருந்தால்தான் பணியில் தரம், பொதுப் பயன்பாட்டு கட்டடங்களுக்கு பாதுகாப்பு இருக்கும்.
பதவி உயர்வு பெற்ற பொறியாளர்களில் யார், யார் நேரடியாக கல்லுாரியில் பயின்றவர்கள் அல்லது அதற்கு இணையாக கல்வித் தகுதி பெற்றுள்ளனரா, அதற்கு ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணப் பலன்களை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர், வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us