ஆன்லைனில் வேலை வாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
ஆன்லைனில் வேலை வாய்ப்பு முகாம்: வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு
UPDATED : நவ 26, 2020 12:00 AM
ADDED : நவ 26, 2020 10:40 PM
புதுச்சேரி;
அரசு வேலைவாய்ப்பகம் சார்பில் டிசம்பர் மாத முதல் வாரத்தில், ஆன்லைனில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தொழிலாளர் துறை செயலர் வல்லவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இணைய வழி வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில், 4 தனியார் நிறுவனங்கள், சூப்ரீம் இன்டஸ்ட்ரிஸ், லக்ஸ் சோர்ஸ் பிசினஸ் சொலுஷ்சன், கியூடெக் சர்வீஸ் மற்றும் மணிசாப்ட் சொலுஷ்சன் ஆகிய நிறுவனங்கள், 123 காலி இடங்களை நிரப்புவதற்கு முகாமில் கலந்து கொள்கின்றன.
18 வயது முதல் 35 வயது உட்பட்ட 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்கள், இம்முகாமில் பங்கு பெறலாம். இந்நிகழ்ச்சி கொரோனா தொற்றின் காரணமாக, இணையளதத்தின் வாயிலாக நடத்தப்பட உள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் தொழிலாளர் துறை இணையதளத்தில் "labour.py.gov.in" கொடுக்கப்பட்டுள்ள தொடர்பில் உள்ள கூகுள் விண்ணப்பம் மூலம் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
பின்னர் குறிப்பிடப்படும் தேதியில், இணையதளம் வழியாக நேர்காணல் நடைபெறும். 26ம் தேதி வரை, விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்படும்.
மேலும் விபரங்களுக்கு 0413-2274672 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
