தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தியாகிகள் தலைமுறை சலுகை நீக்கம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தியாகிகள் தலைமுறை சலுகை நீக்கம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

தியாகிகள் தலைமுறை சலுகை நீக்கம் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை


UPDATED : நவ 30, 2020 12:00 AM

ADDED : நவ 30, 2020 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2020 12:00 AM ADDED : நவ 30, 2020 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
வேளாண் படிப்பு மாணவர் சேர்க்கையில், சுதந்திரப் போராட்ட வீரரின் தலைமுறையினருக்கான ஒதுக்கீட்டை நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கில், &'பல்கலையிடம் விபரம் பெற்று தெரிவிக்கத் தவறினால், கடும் நடவடிக்கைக்கு உத்தரவிடப்படும்&' என, அரசுத் தரப்பை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.
கட்டபொம்மன்விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த அருண்சங்கர் தாக்கல் செய்த மனு:

சுதந்திரப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் சந்ததியைச் சேர்ந்தவன் நான். பிளஸ் 2வில், 600க்கு, 544 மதிப்பெண்கள் பெற்றேன். வேளாண் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, கோவை வேளாண் பல்கலை அறிவிப்பு வெளியிட்டது. 
அதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட வீரரின் தலைமுறையினர், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. விண்ணப்பித்தேன். தரவரிசைப் பட்டியலில், என் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது. முதலிடம் பெற்றவருக்கு, நீட் தேர்வு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. இதனால், அடுத்ததாக அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற அடிப்படையில், சீட் ஒதுக்கீடு பெற எனக்கு தகுதி உண்டு. 
தொழிற்கல்வி

ஆனால், மாற்றி அமைக்கப்பட்ட பட்டியலில், சுதந்திரப் போராட்ட வீரரின் தலைமுறைக்கான ஒதுக்கீடு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பதிலாக அந்த இடம், தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரின் தலைமுறையினருக்கான பிரிவின் கீழ், சலுகை பெற எனக்கு தகுதி உள்ளது. அப்பிரிவை, மாணவர் சேர்க்கையில் இருந்து நீக்கிய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். என்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். 
மாணவர் சேர்க்கையில், சுதந்திரப் போராட்ட வீரரின் தலைமுறையினருக்கான பிரிவில், என் பெயரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். 
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, &'கலந்தாய்வு நடைமுறை துவங்கியபின், மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடக்கூடாது என்பதை ஏன் பின்பற்றவில்லை? கோவை வேளாண் பல்கலை டீனிடம் விபரம் பெற்று, நவ., 30ல் அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.&'தவறினால், கடும் நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்&' என, எச்சரிக்கை விடுத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us