தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில் இல்லை இது; பெண்களின் ஆரோக்கியம்!

தொழில் இல்லை இது; பெண்களின் ஆரோக்கியம்!

தொழில் இல்லை இது; பெண்களின் ஆரோக்கியம்!


UPDATED : நவ 30, 2020 12:00 AM

ADDED : நவ 30, 2020 08:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2020 12:00 AM ADDED : நவ 30, 2020 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை அருகே உள்ள தொக்கூர் கிராமத்தில், &'முல்லை நாப்கின்ஸ்&' என்ற பெயரில், பெண்களுக்கான, மூலிகை நாப்கின்களை தயாரித்து வரும் சுய உதவிக்குழுவின் தலைவி தீபலெட்சுமி: 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த, இரண்டு நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற நான், மூலிகை நாப்கின் தயாரிக்க கற்றுக் கொண்டேன். அதன் பின், எங்கள் கிராம பெண்கள் இருவரை, கரூரைச் சேர்ந்த வள்ளி என்பவரிடம் அனுப்பி, மூலிகை நாப்கின் தயாரிப்பை அறிந்து வரச் செய்து, ௨௦௧௮ முதல், இந்த சேவையை தொடர்கிறோம். 
நானும், என் தோழிகள் நான்கு பேரும், தலா, ௫௦ ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டு, இந்த தொழிலை நடத்தி வருகிறோம். எங்களிடம், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகின்றனர். மாதம், ஒவ்வொருவருக்கும், ௫,௦௦௦ ரூபாய்க்கு மேல் கிடைக்கிறது. வருங்காலத்தில் இன்னும் அதிகமாகும்.வழக்கமான பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் நாப்கின்களை அணிந்தவர்களுக்கு, பல விதமான உடல்நலக் குறைபாடுகள் வந்த நிலையில், வேம்பு, சோற்றுக்கற்றாழை, மஞ்சள், துளசி போன்ற ஒன்பது வகையான மூலிகைகளை வைத்து தயாரிக்கப்படும் எங்கள் நாப்கின்களை பயன்படுத்திய பெண்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டது. 
அதனால் தான், எங்களிடம் முதலில் வாங்கியவர்கள், இப்போது வரை தொடர்ந்து வாங்கியபடி உள்ளனர். பயிற்சியில் எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளையும் தாண்டி, நாங்களாக ஆய்வு செய்து, புதிய மூலிகைகள் சிலவற்றை சேர்த்து, நாப்கின்கள் செய்வதால், அதை அணியும் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான எந்த பிரச்னையும் வருவதில்லை.சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதி பெண்களில் முக்கால்வாசி பேருக்கு, பல விதமான மாதவிடாய் பிரச்னைகள் இருந்தன. அவர்களின் மருத்துவ பரிசோதனை குறிப்புகளுடன் பிரபல டாக்டர்களை சந்தித்த போது, மாதவிடாய் காலத்தில் அந்த பெண்கள் அணியும் ஆடைகளில் தான் பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்தேன்.
அதுமுதல், அந்தப் பெண்களுக்கும் மூலிகை நாப்கின்களை வழங்கினோம். எல்லாரும் நன்றாக உணர்கின்றனர். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களால், எங்களின் விற்பனை வாய்ப்பு மற்றும் தேவை அதிகரித்து உள்ளது. கடையில் விற்கும் நாப்கின்களை விட, எங்களின் நாப்கின்கள் விலை அதிகம் தான். எனினும், அசாம் முதல், அமெரிக்கா வரை, எங்களின் நாப்கின்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், அவற்றை அணிவதால் கிடைக்கும் ஆரோக்கியம் தான். இதை நாங்கள் தொழிலாக மட்டும் நினைத்து செய்வதில்லை; பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயமாக கருதி, அக்கறையுடன் செய்கிறோம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us