தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.பில்லியன் திறனாய்வு கூடத்துடன் ஆச்சார்யா கல்விக் குழுமம் ஒப்பந்தம்

எஸ்.பில்லியன் திறனாய்வு கூடத்துடன் ஆச்சார்யா கல்விக் குழுமம் ஒப்பந்தம்

எஸ்.பில்லியன் திறனாய்வு கூடத்துடன் ஆச்சார்யா கல்விக் குழுமம் ஒப்பந்தம்


UPDATED : டிச 06, 2020 12:00 AM

ADDED : டிச 06, 2020 10:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 06, 2020 12:00 AM ADDED : டிச 06, 2020 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
பணியிட திறனை வளர்க்கும் வகையில் ஆச்சார்யா கல்விக் குழுமம், எஸ்.பில்லியன் திறனாய்வுக் கூடத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆச்சார்யா கல்வி குழும தாளாளர் அரவிந்தன், பில்லியன் திறனாய்வு கூட இயக்க தலைமை அதிகாரி ராமச்சந்திரன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இது குறித்து ஆச்சார்யா கல்வி குழும தாளாளர் அரவிந்தன் கூறியதாவது:

21ம் நுாற்றாண்டின் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், அரசானது இந்திய அறிவார்ந்த இளம் தலைமுறைக்கு தொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இன்றைய மாற்றங்கள் நிறைந்த உலகில் புதிய வணிக மாதிரிகள், மனிதவள மேம்பாடு அடிப்படையில் வேலைவாய்ப்பினை நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. அதுபோலவே, தொழில் முறை சார்ந்து பயிற்சி அளித்தல் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன. 
மேலும் 21ம் நுாற்றாண்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட தரமான வேலைவாய்ப்பினை ஆச்சார்யா மாணவர்களுக்கு வழங்கவும் அனிமேட் தொகுதிகள், சுய வழிகாட்டி மற்றும் ஸ்மார்ட் வகுப்புகள் போன்ற திறன்களில் பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக இந்தியாவின் தலைசிறந்த திறன் மேம்பாட்டு நிறுவனமான எஸ்.பில்லியன் திறனாய்வுக் கூடத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு மதிப்புள்ள சான்றிதழ்களை எஸ்.பில்லியன் திறனாய்வு கூடம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us