தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன் வழங்கல்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன் வழங்கல்

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ரூ.2 கோடி கல்விக்கடன் வழங்கல்


UPDATED : டிச 18, 2020 12:00 AM

ADDED : டிச 18, 2020 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 18, 2020 12:00 AM ADDED : டிச 18, 2020 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
உயர்கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்விக் கடனாக, ரூ.2 கோடியே 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை, முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
கல்லுாரிகளில் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மேற்படிப்பு பயிலும் ஆதி திராவிட மாணவ, மாணவிகளுக்கு, ஆதி திராவிடர் மேம்பாட்டுக் கழகம், தேசிய அட்ட வணை இனத்தவர் நிதி மேம்பாட்டுக் கழக திட்டம் இணைந்து, கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சி, புதுச்சேரி சட்டசபையில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, நலத்துறை அமைச் சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்று, 315 மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடனாக 1 கோடியே 97 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய், வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவிக்கு ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 316 மாணவர்களுக்கு 2 கோடியே 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் கல்விக் கடன் வழங்கினர். எம்.எல்.ஏ., விஜயவேணி, துறை செயலர் உதயகுமார், ஆதி திராவிடர் மேம்பாட்டுக கழக மேலாண் இயக்குனர் யஷ்வந்தையா உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us