UPDATED : ஜன 03, 2021 12:00 AM
ADDED : ஜன 03, 2021 07:56 AM
புதுச்சேரி:
தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் துாய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து அடையாளம் காண்பது குறித்த பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் கோமதி துவக்கி வைத்தார். துாய்மை இந்தியா திட்டம் குறித்து உழவர் கரை நகராட்சி சுகாதார அதிகாரி நவஷத், இளநிலை பொறியாளர் கருணாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். சுவேட்சதா கார்ப்பரேஷன் பொது மேலாளர் அனுப்குமார், உதவி பொது மேலாளர் ஜோசப், கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
பள்ளி நிர்வாகி சித்ரா, சுப்பையா நகர் நலவாழ்வு சங்க தலைவர் பத்பநாபன், செயலாளர் நாகராஜன், ரகுநாதன், பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
