தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாமதமின்றி பள்ளியை திறக்க பெற்றோர் வலியுறுத்தல்

தாமதமின்றி பள்ளியை திறக்க பெற்றோர் வலியுறுத்தல்

தாமதமின்றி பள்ளியை திறக்க பெற்றோர் வலியுறுத்தல்


UPDATED : ஜன 07, 2021 12:00 AM

ADDED : ஜன 07, 2021 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2021 12:00 AM ADDED : ஜன 07, 2021 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா தாக்கத்தால் பள்ளிகளை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.
வரும் 8ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்தார். நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் கருத்து கேட்பு கூட்டம் துவங்கியது. பொங்கல் விடுமுறைக்கு பின் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து கருத்துக்கள் பெறப்படுகின்றன. பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து கருத்துகளை பதிவு செய்தனர்.
பெரும்பாலான பெற்றோர் &'பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும். மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் அவர்களை மீண்டும் கல்வி கற்க துாண்டுவது சவாலானதாக இருக்கும்&' என தெரிவித்துள்ளனர். 
கருத்து கேட்பு பணிகளை இன்றைக்குள் முடித்து விட்டு நாளைக்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us