தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவில் தமிழகம் சாதனை

தேசிய அளவில் தமிழகம் சாதனை

தேசிய அளவில் தமிழகம் சாதனை


UPDATED : ஜன 23, 2021 12:00 AM

ADDED : ஜன 23, 2021 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2021 12:00 AM ADDED : ஜன 23, 2021 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தேசிய இளைஞர் விழாவை ஒட்டி நடந்த போட்டிகளில் தமிழகம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜன. 12 முதல் 16 வரை தேசிய இளைஞர் விழா மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு கொரோனா காரணமாக மாவட்ட மாநில அளவிலான போட்டிகள் இணையதளம் வழியாக 2020 டிச. 29 முதல் ஜன. 8 வரை நடத்தப்பட்டன.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 59 ஆயிரத்து 199 பேர் பங்கேற்றனர். &'கிளாசிக்&' இசை வடிவமைப்பு பாரம்பரியம் நவீனம் கலைக்காட்சி வரைதல் புகைப்படம் சுற்றுச்சூழல் மற்றும் கலைக்காட்சி சிற்பம் தயாரித்தல் ஆகிய போட்டிகளில் தமிழகம் பங்கேற்றது.
சென்னை கலைவாணர் அரங்கில் இம்மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை வல்லுனர் குழு ஆலோசனையின்படி 136 வெற்றியாளர்கள் விபரம் பதிவு செய்யப்பட்டன. இவை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தமாக தமிழகம் தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us