UPDATED : ஜன 28, 2021 12:00 AM
ADDED : ஜன 28, 2021 12:33 PM
அ நிறம் | அளவு
கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இம்மாதம் 19ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஆனாலும் பொதுத்தேர்வுக்கு முன் அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத நிலை உள்ளது.
எனவே முதற்கட்டமாக 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் விபரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம் 9ம் வகுப்புக்கான பாடதிட்டம் குறைக்கப்பட்டு அதன் நகல்கள் வெளியிடப்பட்டன. அதைத்தொடர்ந்து நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கான பாட திட்டமும் குறைக்கப்பட்டு அதன் விபரங்கள் வெளியாகின.
