UPDATED : ஜன 28, 2021 12:00 AM
ADDED : ஜன 28, 2021 12:56 PM
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த குறுகிய கால பயிற்சி வகுப்புகளை டி.ஆர்.டி.ஓ., அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,) தலைமையிடம் டில்லியில் உள்ளது. இந்த அமைப்பு குறுகிய கால பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. இரண்டு பயிற்சி வகுப்புகள், 12 வார கால அளவில் முடிக்கப்படும். பயிற்சி வகுப்புக்கு ஆன்லைன் நுழைவுத் தேர்வு வாயிலாக, விண்ணப்பம் செய்பவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வுக்கான பதிவு இலவசம் மற்றும் பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம். இதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று (ஜன., 28) துவங்கி, பிப்., 15ல் முடிவடைகிறது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு பிப்., 20, சைபர் பாதுகாப்புக்கான நுழைவு தேர்வு பிப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது. வகுப்புகள் பிப்., 28 முதல் துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
