தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
உயர்கல்வித் துறையில் உதவி பேராசிரியர் உள்ளிட்ட 53 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை நடக்கிறது.
புதுச்சேரி அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளில் காலியாக உள்ள 45 உதவி பேராசிரியர்கள், 4 நுாலகர்கள், 4 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் கடந்த மாதம் 13ம் தேதி https://dhte.py.gov.in மற்றும் https://centacpducheryy.in/job என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை 12ம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வித் துறை வளாகத்தில் நடக்கிறது. 
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு, தேர்வு செய்யப்பட்டவர்கள் அந்தந்த கல்லுாரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவர். அவர்கள் 15ம் தேதி பணியில் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்களுடன் வர தவறும்பட்சத்திலோ, குறிப்பிட்ட தேதிக்குள் பணியில் சேராவிட்டாலோ, அடுத்த நிலையில் உள்ள தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இத்தகவலை, உயர் கல்வித் துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயணா ரெட்டி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us