தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை


UPDATED : பிப் 11, 2021 12:00 AM

ADDED : பிப் 11, 2021 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2021 12:00 AM ADDED : பிப் 11, 2021 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. 
அரசு பள்ளிகளில் கல்வி, &'டிவி&' வழியே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, பள்ளிகள் வழியாக அரசு தேர்வு துறை சேகரித்துள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பிப்., 1 முதல் இன்றைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வு துறை அறிவுறுத்தியது. ஆனால், பெரும்பாலான பள்ளிகள், இந்த பணிகளை இன்னும் துவங்கவே இல்லை. அதனால், பிளஸ் 1 பொது தேர்வு பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு மற்றும்பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பதிவு செய்வதற்கு கடைசி நாள் நெருங்கிய பிறகும், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர் விபரங்கள் பதிவு செய்யவில்லை. எனவே, தாமதமின்றி ஓரிரு நாளில் அரசு தேர்வு துறைக்கு தேவையான விபரங்களை, கட்டாயம் பதிவு செய்து, தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us